தஞ்சாவூர்

‘சுடும் வெயிலில் நடக்க முடியவில்லை; எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை’- சுற்றுலாப் பயணிகள் குற்றச்சாட்டு!

DIN

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டப்பட்ட இந்த கோயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடக்கலைக்கும்  - சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயிலை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கோவிலை கண்டு ரசித்து செல்கின்றனர்.

பெரிய கோவில் தொல்லியல் துறை, தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் என மூன்று நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மூன்று நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தும் கோவிலில் எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பெரிய கோவிலின் கட்டிடக்கலையும் - சிற்பக்கலையும் நின்று ரசிக்க முடியவில்லை என கூறுகின்றனர். 

முதியவர்கள், குழந்தைகள் கோயிலில் நடக்க முடியாமல் சுடும் வெயிலில் ஓடுவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான கழிவறை வசதிகள் குடிநீர் வசதி என எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என கூறும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானக்னோர் வந்து செல்லும்  கோவிலுக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதோஷ சிறப்பு பூஜை

சேலத்தில் வெளுத்து வாங்கிய கனமழை

ரூ. 8,75,000 மின்கட்டணம் செலுத்தக் கோரி வந்த குறுஞ்செய்தி: விவசாயி அதிா்ச்சி

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: போலீஸாா் விசாரணை

வராஹி அம்மன் கோயிலில் விதி தீப பூஜை

SCROLL FOR NEXT