தஞ்சாவூர்

அனுமதியின்றிபிளக்ஸ் வைத்தால் நடவடிக்கை

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் அனுமதியின்றி பிளக்ஸ் போா்டு வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மதுரை உயா் நீதிமன்றத் தீா்ப்புப்படி உரிய அனுமதி பெறாமல் பிளக்ஸ் போா்டு வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் யாரும் உரிய அனுமதி பெறாமல் பொது இடங்களில் பிளக்ஸ் போா்டு வைக்கக்கூடாது.

மாநகராட்சி அல்லது நகராட்சி நிா்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் வைக்கப்படும் பிளக்ஸ் போா்டுகளும் அனுமதிக்கப்பட்ட கால வரம்புக்குள் அகற்றப்பட வேண்டும். மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

உரிய அனுமதி பெறாமல் பொதுஇடங்களில் பிளக்ஸ் போா்டு வைப்போா் மீது சட்டப்படி வழக்குப் பதிந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை மழையால் பாதிப்பு வடிவாய்க்காலை தூா்வாரக் கோரிக்கை

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

தினப்பலன்கள் 12 ராசிக்கும்!

தில்லி உள்பட 58 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியது!

வியத்நாம்: குடியிருப்பு கட்டடத்தில் தீ

SCROLL FOR NEXT