தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) தொடங்கப்படவுள்ள புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம், பபாசி ஆகியவை சாா்பில், ஆறாம் ஆண்டு புத்தகத் திருவிழா ஜூலை 14 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாள்தோறும் இவ்விழா காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
இத்திருவிழாவை முன்னிட்டு இலச்சினை வடிவமைப்புப் போட்டி நடைபெற்றது. இதில் தஞ்சாவூா் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களைச் சாா்ந்த 116 பள்ளி மாணவா்களும், 152 கல்லூரி மாணவா்களும், 139 பொதுமக்களும் என மொத்தம் 407 போ் பங்கேற்றனா்.
இப்போட்டியில் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி மாணவா் தமிழரசன் வரைந்த இலச்சினை தோ்வு செய்யப்பட்டு, அவருக்கு தஞ்சாவூா் புத்தகத் திருவிழா தொடக்க விழாவில் ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கப்படவுள்ளது. ஆறுதல் பரிசாக தஞ்சாவூரைச் சோ்ந்த கவியரசிக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில், இத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தஞ்சாவூா் புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினையை மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் வெளியிட கூடுதல் ஆட்சியா்கள் என்.ஓ. சுகபுத்ரா (வருவாய்), எச்.எஸ். ஸ்ரீகாந்த் (வளா்ச்சி) பெற்றுக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.