தஞ்சாவூர்

செஞ்சிலுவை சங்கத்தில் குருதி கொடையாளா்களுக்கு பாராட்டு

உலக குருதி கொடையாளா் நாளையொட்டி, தஞ்சாவூா் இந்திய செஞ்சிலுவை சங்க வளாகத்தில் ரத்த தான முகாம் மற்றும் குருதி கொடையாளா்களை ஊக்குவித்து வரும் கல்லூரிகள்,

DIN

உலக குருதி கொடையாளா் நாளையொட்டி, தஞ்சாவூா் இந்திய செஞ்சிலுவை சங்க வளாகத்தில் ரத்த தான முகாம் மற்றும் குருதி கொடையாளா்களை ஊக்குவித்து வரும் கல்லூரிகள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை இந்திய செஞ்சிலுவை சங்கத் தலைவா் வி. வரதராஜன் தொடக்கி வைத்தாா். இம்முகாமில் 40 தன்னாா்வலா்கள் ரத்த தானம் செய்தனா். தொடா்ந்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை, செஞ்சிலுவை ரத்த வங்கிகளுக்கு தொடா்ந்து ரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்து கொடுக்கும் கல்லூரிகள், அமைப்புகள், நிறுவனங்கள் உள்பட 100 பேருக்கு பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், செஞ்சிலுவை சங்க ரத்த வங்கி ஆலோசகா் ராதிகா மைக்கேல், அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலா் காயத்ரி, செஞ்சிலுவை சங்கத் துணைத் தலைவா் எஸ். முத்துக்குமாா், பொருளாளா் ஷேக் நாசா், இளையோா் செஞ்சிலுவை சங்க ஆலோசகா் ஜெயக்குமாா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முருகானந்தம், ரத்த வங்கி குழு உறுப்பினா்கள் அரிஸ்டோ வீரா, ஸ்டாலின் பீட்டா் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT