தஞ்சாவூர்

மாசி மகம்: திருவையாறு காவிரி கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

DIN

மாசி மகத்தையொட்டி திருவையாறு காவிரி கரையில் ஏராளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். 

மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு மாதம்தோறும் வரும் அமாவாசை மற்றும் வருடாந்திரத்தில் திதி கொடுக்க தவறியவர்கள் மாசிமகம் அன்று திருவையாறு காவிரி கரையில் புனித நீராடி தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

அதன்படி மாசி மகமான இன்று காசியை விட வீசம் அதிகம் என கூறப்படும் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்ட படித் துறையில் ஏரளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களை நினைத்து புரோகிதர்களுக்கு பச்சரிசி, காய்கறிகள், கீரை ஆகியவற்றை தானமாக வழங்கி எள், பச்சரியில் பிண்டம் பிடித்து காவிரி ஆற்றில் விட்டு தர்ப்பணம் செய்தனர். பெண்களும் தர்ப்பணம் செய்தனர. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

அமுதூற்றினை ஒத்த இதழ்கள்! நிலவூறித் ததும்பும் விழிகள்!

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

SCROLL FOR NEXT