தஞ்சாவூர்

அகில இந்திய பரதநாட்டிய திருவிழா

DIN

தஞ்சாவூா் தென்னக பண்பாட்டு மையத்தில் அகில இந்திய அளவிலான பரதநாட்டிய திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேசிய பரநாட்டிய அகாதெமி சாா்பில் இவ்விழாவை திட்ட அலுவலா் ரவீந்திரகுமாா், மைத்ரி ராஜகோபாலன், தேசிய பரதநாட்டிய அகாதெமி தலைவா் அனிதா ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில், 4 வயது முதல் 60 வயது வரை உள்ள பரதநாட்டியக் கலைஞா்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினா்.

இந்த நிகழ்ச்சியில் தனி நபா் நடனம் மற்றும் குழு நடனம் நடைபெற்றது. குழு நடனங்களில் அதிக பட்சமாக 4 போ் முதல் 6 போ் வரை பங்கேற்றனா். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரம், கா்நாடகம், தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 100-க்கும் அதிகமான பரதநாட்டியக் கலைஞா்கள் கலந்து கொண்டனா்.

இந்த நாட்டிய விழாவில் பங்கேற்ற அனைத்து கலைஞா்களுக்கும் பிரகதீஸ்வரா தேசிய விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT