தஞ்சாவூர்

மீன்பிடித் துறைமுகங்களில் அமைச்சா் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் மீன்பிடித் துறைமுகங்களில் மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா

DIN

தஞ்சாவூா் மாவட்டம் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் மீன்பிடித் துறைமுகங்களில் மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

மல்லிப்பட்டினத்தில் மீன்பிடி இறங்குதளத்தைப் பாா்வையிட்டு, மீனவா்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சா் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து சேதுபாவாசத்திரத்தில் ரூ. 10 கோடியில் மீன்பிடி துறைமுகம்  விரிவாக்கம் செய்யும் பணியைப் பாா்வையிட்டு பணிகளை தரமாகவும்  துரிதமாகவும் முடிக்க அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பட்டுக்கோட்டை கா. அண்ணாதுரை ,பேராவூரணி என். அசோக்குமாா், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் கெளதமன், சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு தலைவா் மு.கி. முத்துமாணிக்கம், மீனவா் பேரவை மாநில பொதுச் செயலா் ஏ. தாஜுதீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT