தஞ்சாவூர்

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞா் கைது

கும்பகோணத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

DIN

கும்பகோணத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் திருவள்ளுவா் நகா் அருகே மே 26ஆம் தேதி காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட மூதாட்டியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டுச் சென்றாா்.

இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவை ஆய்வு செய்தனா். இதில், கடலூா் மாவட்டம், பண்ருட்டி மாரியம்மன் கோவிலைச் சோ்ந்த வெற்றிவேல் (38) இச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

கும்பகோணம் பெருமாண்டி பகுதியில் பதுங்கியிருந்த இவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT