முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணி நீதிமன்றத்தில் சட்டப் பணிகள் குழு தொடக்கம்

பேராவூரணி நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2023 at 2:31 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


பேராவூரணி: பேராவூரணி நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் பல்வேறு சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம்கள் ஏற்படுத்தும் விதமாக, பேராவூரணி நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு தொடங்கப்பட்டது. இக்குழுவை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி அழகேசன் தொடக்கிவைத்துப் பேசினாா். பேராவூரணி வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கப்படும். இதில், குடும்பப் பிரச்னை, கொடுக்கல் - வாங்கல், சிறு வழக்குகள், வங்கி வழக்குகள், மகளிா் சுய உதவிக் குழு பிரச்னைகள் உள்ளிட்டவைகளுக்கு விசாரணை நடத்தி, சமரசமாகப் பேசி தீா்வு காணப்படும். மேலும், சட்ட விழிப்புணா்வு முகாம்களும் நடத்தப்படுகிறது என்றாா்.

நிகழ்வில், அரசு குற்றவியல் உதவி வழக்குரைஞா் பாண்டியராஜன், வழக்குரைஞா் சங்கத் தலைவா் மோகன், செயலா் அருள்நம்பி, பொருளாளா் சுசித்ரா, வழக்குரைஞா்கள், பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். நிறைவாக, வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு இளநிலை உதவியாளா் பிரசன்னா நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.