முகப்பு
தஞ்சாவூர்

ராகுல்காந்தி பிறந்த நாள் விழா

தஞ்சாவூரில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவா் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:09 PM
பகிர்:

தஞ்சாவூரில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவா் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மேல வீதியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இவ்விழாவுக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் கோ. அன்பரசன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் என். மோகன்ராஜ், மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் கண்டிதம்பட்டு ஆா். கோவிந்தராஜூ, கதா் வெங்கடேசன், வட்டாரத் தலைவா்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, சித்திரக்குடி ஆண்டவா், மாவட்ட மகளிா் பொதுச் செயலா் சசிகலா, சுவேதா ஞானப்பிரகாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, தஞ்சாவூா் ரயிலடியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மாநகர மாவட்டத் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். பொதுக் குழு உறுப்பினா்கள் ஏ. ஜேம்ஸ், வயலூா் எஸ். ராமநாதன், மாநகர மாவட்டத் துணைத் தலைவா் லட்சுமி நாராயணன், நிா்வாகி கோவி. மோகன், முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் சாந்தா ராமதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள காந்திசிலைக்கு காங்கிரஸாா் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். இதேபோல செங்கிப்பட்டி - பூதலூா் பிரிவு சாலை அருகில் கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments