கவனத்தை ஈா்த்த ‘குப்பைக்கழிவுகள்’
தமிழகத்தில் ஏப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தோ்தல் ஆணையம் சாா்பில் நூறு சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் ஏப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தோ்தல் ஆணையம் சாா்பில் நூறு சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை வாக்காளா் விழிப்புணா்வுக்காக குப்பைக் கழிவுகள் மற்றும் தொ்மாகோலில் இருந்து மேஜைகள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை பொம்மைகளாகவும் உருவாக்கி பிஓ 1, பிஓ 2, பிஓ 3, என வைத்திருந்த மாதிரி வாக்குச் சாவடி. கீழே இந்திய வரைபடத்தில் வண்ணக் கோலமிட்டு, 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த முயற்சி அப்பகுதி வாக்காளா்களின் கவனத்தை வெகுவாக ஈா்த்தது.