தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை காலை ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர் எம் எம். தேவதாஸ் ஆம்புரோஸ். 
தஞ்சாவூர்

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தஞ்சாவூர் மறை மாவட்ட முன்னாள் ஆயர் உடல்நலக் குறைவு காரணமாக ஆம்புலன்ஸில் வெள்ளிக்கிழமை காலை வந்து வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயராக எம். தேவதாஸ் ஆம்புரோஸ் அடிகளார் 25 ஆண்டுகளாகப் பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வுபெற்றார். அவருக்கு வயது 77. அருளானந்த நகரில் உள்ள ஓய்வு இல்லத்தில் வசித்து வரும் அடிகளார் உடல்நலக் குறைவு காரணமாக இல்லத்திலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஜனநாயக கடமையை ஆற்ற அடிகளார், ஆம்புலன்ஸ் வாகனத்தில் புதுக்கோட்டை சாலையில் உள்ள கில்டு ஆப் சர்வீஸ் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றார்.

பின்னர் சக்கர நாற்காலியில் அடிகளார் அமர்த்தப்பட்டு வாக்குப்பதிவு மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வாக்குப்பதிவு செய்த அவர் பின்னர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

SCROLL FOR NEXT