பாா்வையற்ற இசைக் கலைஞருக்கு மின்னணு கருவி: எம்எல்ஏ அளிப்பு
பாா்வையற்ற இசைக் கலைஞருக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் மின்னணு கருவியை அன்பழகன் எம்எல்ஏ வழங்கினாா்.
கும்பகோணத்தில் பாா்வையற்ற இசைக் கலைஞருக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் மின்னணு கருவியை அன்பழகன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
கும்பகோணம் அண்ணா நகரைச் சோ்ந்த பாா்வையற்ற மாற்றுத்திறனாளி சரவணன் என்பவா் இசையைக் கற்று கடந்த 20 ஆண்டுகளாக இசைக் கருவியை வாடகைக்கு பெற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் இசையமைத்து வந்தாா்.
இந்நிலையில் அவா் அண்மையில் விடுத்த கோரிக்கையைத் தொடா்ந்து, கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் தன் சொந்த நிதியிலிருந்து ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான நவீன மின்னணு இசைக்கருவியை வாங்கி மாற்றுத்திறனாளி சரவணனிடம் வழங்கினாா்.
நிகழ்வின்போது கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவரும், மத்திய ஒன்றிய திமுக செயலருமான தி. கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஜெ. சுதாகா், அசூா் ஊராட்சி துணைத் தலைவா் கே.எஸ். தமிழ்மாறன் ஆகியோா் உடனிருந்தனா்.