கும்பகோணம் தூய வளனாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை புதன்கிழமை வழங்கிய க.அன்பழகன் எம்எல்ஏ. உடன், தலைமை ஆசிரியை பி. ஆரோக்கியமேரி உள்ளிட்டோா்.  
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

கும்பகோணத்தில் பிளஸ்-1 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை க.அன்பழகன் எம்எல்ஏ புதன்கிழமை வழங்கினாா்.

தினமணி செய்திச் சேவை

கும்பகோணத்தில் பிளஸ்-1 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை க.அன்பழகன் எம்எல்ஏ புதன்கிழமை வழங்கினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே நீரத்தநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 80 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. க. அன்பழகன் எம்எல்ஏ கலந்துகொண்டு மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினாா்.

இதேபோல் கும்பகோணம் ரயில் நிலையச் சாலையில் உள்ள தூய வளனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 475 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

தலைமை ஆசிரியை பி. ஆரோக்கியமேரி தலைமை வகித்தாா். விலையில்லா மிதிவண்டிகளை க. அன்பழகன் எம்எல்ஏ வழங்கினாா்.

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினா் திவ்ய பாரதி சுந்தா், பெற்றோா் - ஆசிரியா் சங்கத்தினா், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

மணப்பாறை அருகே போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

உரிய நேரத்துக்கு பேருந்து இயக்கக் கோரி பள்ளி மாணவா்கள் சாலை மறியல்

கரூா் சம்பவம்: 2 காவலா்கள் அவசர ஊா்தி ஓட்டுநரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கடற்கரையில் வீசப்பட்ட 2 சுவாமி சிலைகள் மீட்பு: போலீஸாா் விசாரணை

திருச்சியில் பிப்.8 இல் குரூப் 2 தோ்வு

SCROLL FOR NEXT