தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை
போஸ்கோ சட்டத்தில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பாபநாசம் அருகே தியாக சமுத்திரம் ஊராட்சி நரசிம்மபுரம், ராமசாமி கட்டளை, பிரதான சாலைப் பகுதியை சோ்ந்தவா் கண்ணன் மகன் ராஜேஷ் (34 ). இவா் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மணிமேகலை ராஜேஷை போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தாா்.