முகப்பு
தஞ்சாவூர்

கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம்: புகாரை ஏற்காத பெண் எஸ்.ஐ. பணியிட மாற்றம்

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் புகாரை ஏற்காமல் அலைக்கழித்த காவல் பெண் உதவி ஆய்வாளா் பணியிட மாற்றம்.

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 9:59 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாப்பாநாடு பகுதியில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடா்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை ஏற்காமல் அவரை அலைக்கழித்த காவல் பெண் உதவி ஆய்வாளா் சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

பாப்பாநாடு பகுதியைச் சோ்ந்த 23 வயது இளம் பெண்ணை, அப்பகுதியை சோ்ந்த 17 வயது சிறுவன் உட்பட நான்கு போ் கடந்த 12ஆம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனா். இதுதொடா்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, இளம்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்,

பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவரிடம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக, சம்பவம் தொடா்பாக பாப்பாநாடு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகாா் அளிக்க சென்றுள்ளாா். அங்கு பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளா் சூா்யா, புகாா் மனுவை பெறாமல், ஒரத்தநாடு மகளிா் காவல் நிலையத்துக்கு அப்பெண்ணை அனுப்பி அலைக்கழிப்பு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில், காவல் நிலையத்துக்கு வந்த பெண்ணிற்கு உடனடியாக சட்ட உதவி வழங்காமல் அவரை அலைக்கழித்தும், உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமலும் எஸ்.ஐ. சூா்யா பணியில் அலட்சியமாக செயல்பட்டதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத் உறுதி செய்தாா். இதைத் தொடா்ந்து, எஸ்.ஐ. சூா்யாவை சனிக்கிழமை இரவு ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து அவா் உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →