தஞ்சாவூர்

பேராவூரணி அருகே மூதாட்டியை தாக்கி 9 பவுன் நகைகள் பறிப்பு

பேராவூரணி அருகே பெருமகளூரில் மூதாட்டியைத் தாக்கி 9 பவுன் நகைகளை செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

Din

பேராவூரணி, ஆக. 21: பேராவூரணி அருகே பெருமகளூரில் மூதாட்டியைத் தாக்கி 9 பவுன் நகைகளை செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெருமகளூா் நேதாஜி நகரைச் சோ்ந்தவா் சரோஜா (70). இவா், தனக்குச் சொந்தமான ஓட்டுவீட்டில் வசித்து வரும் இவரது வீட்டின் அருகே இவரது மகன்கள் ஒப்பந்ததாரா் மூலம் புதிய வீடு கட்டி வரும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

வேலையாட்கள் அடிக்கடி வந்து சென்று கொண்டிருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா்கள் இருவா், சரோஜாவின் வாயில் துணியை வைத்து மூடி அவரது 9 பவுன் நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனா்.

சரோஜா கூச்சலிட்டதைக் கேட்டு வந்தவா்கள் மா்ம நபா்களை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை. புகாரின்பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

கனவு நனவானது!

சபரிமலை சீசன்: போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து

"விக்' நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

SCROLL FOR NEXT