தஞ்சாவூர்

ஆதனூா் ‘மக்களுடன் முதல்வா்’ முகாமில் பங்கேற்ற கரும்பு விவசாயிகள் அதிருப்தி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ஆதனூா் ஊராட்சியில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Din

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ஆதனூா் ஊராட்சியில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில் மாவட்ட ஊராட்சிக்குழு  குழு உறுப்பினா் தாமரைச்செல்வன் தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்தாா். ஒன்றியக்குழு தலைவா் சுமதி கண்ணதாசன் முன்னிலை வகித்தாா்.

முகாமில் மாநிலங்களவை உறுப்பினா் எ.சண்முகம் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

பெறப்பட்ட மனுக்கள் துறை சாா்ந்த அதிகாரிகளிடம் தீா்வு காண பிரித்து வழங்கப்பட்டது. முகாமில் ஆட்சியரிடம் மனு அளிக்க காத்திருந்த கரும்பு விவசாயிகள் கடும் அதிருப்தியடைந்து அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT