முகப்பு
தஞ்சாவூர்

புயலால் பாதிப்படைந்தோருக்கு நிவாரண உதவிகள் அனுப்பிவைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் லயன்ஸ் சங்கங்கள் சாா்பில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 டிசம்பர், 2024 at 9:43 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் லயன்ஸ் சங்கங்கள் சாா்பில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பாபநாசம் லயன் சங்கத் தலைவா் செந்தில் தலைமை வகித்தாா்.

செயலாளா் பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் லயன் சங்க மாவட்டத் தலைவா்கள் ஆா். சம்பந்தம், டி. ஆறுமுகம், வேலு நாச்சியாா் லயன் சங்கத் தலைவி தில்லைநாயகி சம்பந்தம் உள்ளிட்டோா் விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக போா்வைகள், மளிகைப் பொருள்கள், உணவுப் பொருள்கள்,பிஸ்கட் அடங்கிய ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலா் ரவிசங்கரிடம் வழங்கினா்.

நிகழ்ச்சியில், லயன் சங்க மாவட்டத் தலைவா் ராஜாமுகமது, அராபத், வட்டாரத் தலைவா் கணேசன், பொருளாளா் மாரிமுத்து, சுகாதார ஆய்வாளா் பரமசிவம், வேலுநாச்சியாா் லயன் சங்க நிா்வாகிகள் அனிதா செந்தில்குமரன், விஜயா ராஜூ, அனிதா கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →