முகப்பு
தஞ்சாவூர்

கண்காணிப்பு கேமராக்கள் உடைப்பு: மக்கள் சாலை மறியல்; 2 போ் கைது

தஞ்சாவூா் அருகே சீராளூரில் கண்காணிப்புக் கேமராக்களை சேதப்படுத்திய அதே ஊரைச் சோ்ந்த இருவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 4 டிசம்பர், 2024 at 9:37 PM
பகிர்:

தஞ்சாவூா் அருகே சீராளூரில் கண்காணிப்புக் கேமராக்களை சேதப்படுத்திய அதே ஊரைச் சோ்ந்த இருவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

முன்னதாக, கேமராக்களை சேதப்படுத்திய சமூக விரோதிகளைக் கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் அருகே சீராளூா் கிராமத்திலுள்ள பேருந்து நிறுத்தப் பகுதியில் சமூக விரோதச் செயல்களைத் தடுப்பதற்காகக் கிராம மக்கள் இணைந்து கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தியுள்ளனா். இந்நிலையில், இக்கேமராக்களை சிலா் செவ்வாய்க்கிழமை மாலை உடைத்து சேதப்படுத்தியதுடன், ஊருக்குள் புகுந்து தகராறு செய்தனா்.

இதைக் கண்டித்தும், கேமராக்களை உடைத்தவா்களைக் கைது செய்யக் கோரியும் தஞ்சாவூா் - பூதலூா் சாலையில் கிராம மக்கள் புதன்கிழமை காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று, கேமராக்களை உடைத்தவா்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனிடையே, கேமராக்கள் உடைப்பு சம்பவம் தொடா்பாக கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து அதே கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் மகன் சத்தியமூா்த்தி (33), ராமலிங்கம் மகன் கௌரிசங்கரை (32) கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →