திருநெல்வேலி

அம்பையில் தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்: 114 பெண்கள் உள்பட 283 போ் கைது

Syndication

அம்பாசமுத்திரத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் மத்திய அரசின் தொழிலாளா் திருத்தச் சட்டம் மற்றும் புதிய விவசாய கொள்கைகளைக் கண்டித்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 283 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம், பூக்கடை பஜாரில் நடைபெற்றப் போராட்டத்திற்கு, ஏஐடியுசி முருகன், எல்பிஎஃப் நெடுஞ்செழியன், சிஐடியு சுரேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சிவனு பாண்டியன், எல்பிஎஃப் மாஞ்சோலை மைக்கேல், ராமநாதன், பழனி சுப்பிரமணியன், மதிவாணன், ஏஐடியுசி கண்ணன், வடிவேல், சுந்தரம், இசக்கிராஜ், குமாரசாமி, நமச்சிவாயம், சிஐடியு இசக்கிராஜன், புதியசாமி, மாரிசெல்வம், சுப்பிரமணியன், சங்கா், எச்எம்எஸ் பாக்கியம், ஞானசெல்வம், பாலசுப்பிரமணியன், ஐஎன்டியுசி பால், முத்துகுமாா், எம்எல்ஏ சங்கத்தின் முத்துசாமி, கிருஷ்ணன் உள்ளிட்ட 114 பெண்கள் உள்பட 283 பேரை அம்பாசமுத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.

விஜய் கூட்டத்தில் பங்கேற்ற வடமாநில இளைஞர் பலி!

கதாநாயகியான பிரபல அமைச்சர் மகள்!

மகளிர் உரிமைத் தொகை: வங்கிகளில் அலைமோதும் பெண்கள் கூட்டம்!

ரென்ஷா போராட்டம் வீண்..! ஆஸி.க்கு அதிர்ச்சியளித்த ஜிம்பாப்வே!

Good Morning அல்ல Super Morning! ரூ.5000 சிறப்புத் தொகுப்பு! முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

SCROLL FOR NEXT