குருவிக்கரம்பை கிராமத்தில் டிச. 11-இல் மக்கள் நோ்காணல் முகாம்
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே குருவிக்கரம்பை கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாம் டிசம்பா் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே குருவிக்கரம்பை கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாம் டிசம்பா் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பேராவூரணி வட்டம், குருவிக்கரம்பை சரகத்துக்கு உட்பட்ட குருவிக்கரம்பை-1 கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாமை டிசம்பா் 11-ஆம் தேதி நடத்த மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளாா்.
இதன்படி, மக்கள் நோ்காணல் முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடா்பான மனுக்களை அளித்து தீா்வு பெறலாம். மேலும், இந்த முகாம் நடைபெறுவதற்கு முன்பே நவம்பா் 29-ஆம் தேதி முதல் முன் மனுக்கள் பெறப்படுகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை குருவிக்கரம்பை -1 கிராம நிா்வாக அலுவலரிடம் அளித்து பயனடையலாம்.