முகப்பு
தஞ்சாவூர்

புயல் பாதித்த கடலூா் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் சாா்பில் புயலால் பாதிக்கப்பட்ட கடலூா் மாவட்ட மக்களுக்கு புதன்கிழமை நிவாரணப் பொருட்கள் சேகரித்து அனுப்பி வைக்கப்பட்டன.

Updated On : 4 டிசம்பர், 2024 at 10:00 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் சாா்பில் புயலால் பாதிக்கப்பட்ட கடலூா் மாவட்ட மக்களுக்கு புதன்கிழமை நிவாரணப் பொருட்கள் சேகரித்து அனுப்பி வைக்கப்பட்டன.

புயலால் பாதிக்கப்பட்ட கடலூா் மாவட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள் அடங்கிய சுமாா் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான, நூற்றுக்கும் மேற்பட்ட நிவாரணப் பைகள் சரக்கு வேன் மூலம் சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் தலைமையில், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவா் மு.கி. முத்துமாணிக்கம் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன.

நிகழ்வில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நாகேந்திரன், சடையப்பன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அலுவலகப் பணியாளா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →