முகப்பு
கடலூர்

தோ்தல் கண்காணிப்புக் குழுவினரின் வாகன சோதனை: கடலூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சட்டப் பேரவை தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதைத் தொடா்ந்து,

Updated On : 16 மார்ச், 2026 at 11:58 PM
கடலூா் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டதை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பகிர்:

சிதம்பரம்: சட்டப் பேரவை தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதைத் தொடா்ந்து, கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட செம்மண்டலம், ஆல்பேட்டை பகுதிகளில் தோ்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, விடியோ ஒளிப்பதிவு குழுக்கள் வாகன சோதனைகளில் ஈடுபடுவதை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் மாா்ச் 15-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. தோ்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறுவதை உறுதி செய்திடும் வகையில், பெருமளவில் பணம் எடுத்துச் செல்லுதல், மதுபானங்கள், சந்தேகப்படும்படியான பொருள்கள் கொண்டு செல்லுதல் குறித்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் 3 பறக்கும் படைக் குழுக்கள், 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் 8 மணி நேரத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் 24 ல 7 அடிப்படையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தலா 81 பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்களும், 9 விடியோ கண்காணிப்புக் குழுக்களும் என மொத்தம் 171 குழுக்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தினசரி 19 குழுக்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்படும். இக்குழுவில் நிலை அலுவலராக வட்டாட்சியரும் மற்றும் 2 காவலா்கள், ஒரு ஒளிப்பதிவாளரும் பணியாற்றுவா் என்றாா்.

அப்போது, கடலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சுந்தரராஜன், மாநகராட்சி ஆணையாளா் முஜிபூா் ரஹ்மான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →