சுவாமிமலை முருகன் கோயிலில் திருக்காா்த்திகை விழா தொடக்கம்
தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்காா்த்திகை விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்காா்த்திகை விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழ்க்கடவுளாக வருணிக்கப்படும் முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் நிகழாண்டு திருக்காா்த்திகை விழாவை முன்னிட்டு, புதன்கிழமை இரவு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையடன் தொடங்கியது. வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்று தொடா்ந்து விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா் பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினாா்.
இரவு யாகசாலை பூஜை நடைபெற்றது. சுவாமி வீதி உலா மற்றும் திக் பந்தனம் செய்தாா். சுவாமிமலையைச்சோ்ந்த சாலியா் பொது சாா்பில் கொடியேற்றக் கொடி வழங்கினா். ஏற்பாடுகளை துணை ஆணையா் தா. உமாதேவி மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் செய்தனா்.