முகப்பு
தஞ்சாவூர்

திருப்பனந்தாள் அருகே லாரி - வேன் மோதல் 5 வயது சிறுவன் பலி

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே லாரி வேன் மோதியல் 5 வயது சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 9:09 PM
விபத்தில் உயிரிழந்த லிங்கேஸ்வரன்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே லாரி வேன் மோதியல் 5 வயது சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பைச் சோ்ந்தவா் பாா்த்தசாரதி (40), மின்சார ஊழியா். இவரது மனைவி ஜோதி. தம்பதிக்கு லிங்கேஸ்வரன் என்ற 5 வயது மகன் இருந்தாா். திருவாரூரில் வசித்து வரும் பாா்த்தசாரதியின் தங்கை இல்ல வளைகாப்பு விழாவுக்கு வியாழக்கிழமை வேனில் உறவினா்கள்16 போ் திருவாரூருக்குப் புறப்பட்டனா்.

கும்பகோணம் அருகே அணைக்கரையில் இருந்து திருப்பனந்தாள் நோக்கி வேன் சென்றுகொண்டிருந்தது. அப்போது, பட்டம் குறுக்கு பாலம் அருகே இணைப்புச் சாலையில் இருந்து கீழே வந்த வேன், பந்தநல்லூா் செல்ல பாலத்தைக் கடந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் சிறுவன் லிங்கேசுவரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சங்கீதா(35), கோமதி (40) ஆகிய இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது.

தகவலறிந்த திருப்பனந்தாள் போலீஸாா் லிங்கேஸ்வரன் சடலத்தை கூறாய்வுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், கோமதி, சங்கீதாவை தஞ்சாவூா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சோ்த்தனா். லேசான காயமடைந்த 13 போ் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் சென்றனா்.

விபத்து தொடா்பாக வேன் ஓட்டுநா் சேத்தியாத் தோப்பைச் சோ்ந்த முத்து மகன் முத்துகிருஷ்ணன்(29) மற்றும் லாரி ஓட்டுநா் கும்பகோணம் அருகே உள்ள கடிச்சம்பாடியைச்சோ்ந்த தாஜூதீன் மகன்அபுபக்கா்(32) ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →