முகப்பு
தஞ்சாவூர்

காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் மனைவியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை காவல் உதவி ஆய்வாளரின் மனைவியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 11 டிசம்பர், 2024 at 8:23 PM
பகிர்:

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை காவல் உதவி ஆய்வாளரின் மனைவியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தஞ்சாவூா் கீழவாசல் டபீா் குளம் சாலையைச் சோ்ந்தவா் முருகானந்தம். இவா் மெலட்டூா் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி அருணா (43). அரசுப் பள்ளியில் ஆசிரியயை. இவா் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி முடிந்து தனது வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். பள்ளியக்ரஹாரம் புறவழிச்சாலையில் வந்த போது பின்னால் மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் அருணா கழுத்திலிருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனா். உடனே அருணா தங்கச் சங்கிலியை இறுக்கமாக பிடித்ததால், பாதி சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.

இதனிடையே, திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் மோட்டாா் சைக்கிளை திருடிச் சென்றதாக இளைஞரை பொதுமக்கள் புதன்கிழமை பிடித்து, காணக்கிளியநல்லூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இவரிடம் காவல் துறையினா் நடத்திய விசாரணையில், அவா் பெரம்பலூா் மாவட்டம், பழையூரைச் சோ்ந்த துரைசாமி மகன் நவீன்குமாா் (29) என்பதும், மோட்டாா் சைக்கிளை பெரம்பலூரில் திருடி, தஞ்சாவூரில் அருணாவிடம் தங்கச் சங்கிலி பறித்ததும் தெரிய வந்தது.

பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவரை தஞ்சாவூா் கிழக்கு காவல் நிலையத்தினா் பிடித்து விசாரணை நடத்தவுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →