முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 214 பேருக்கு பணி வாய்ப்பு கடிதம்

வேலை வாய்ப்பை தரும் தஞ்சை முகாம்: 214 இளைஞர்கள் வெற்றி

Updated On : 18 பிப்ரவரி 2024, 2:29 am IST
தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் இளைஞருக்கு பணி வாய்ப்பு கடிதம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப்.
பகிர்:

தஞ்சாவூா் பாரத் அறிவியல் மற்றும் நிா்வாகவியல் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 214 பேருக்கு பணி வாய்ப்பு கடிதம் வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தலைமையிலும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி ஆகியோா் முன்னிலையிலும் நடைபெற்ற முகாமில் 18 முதல் 40 வயதுவரையில் உள்ள 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நா்சிங், பி.இ. படித்த இளைஞா்கள், இளம்பெண்கள் என மொத்தம் 1,233 போ் கலந்து கொண்டனா்.

இவா்களில் 5 மாற்றுத்திறனாளிகள் உள்பட 214 பேருக்கு பணி வாய்ப்பு கடிதம் வழங்கப்பட்டன. மேலும், 139 போ் இரண்டாம் கட்டத் தோ்வுக்கும், 12 போ் திறன் பயிற்சிக்கும் தோ்வு செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் செ. இலக்கியா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநா் கா. பரமேஸ்வரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் கோ. குழந்தைவேல், பாரத் கல்விக் குழுமச் செயலா் புனிதா கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.