அரியலூரில் மே.22-இல் வேலைவாய்ப்பு முகாம்!
அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மே 22 காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆள்களை தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்ய உள்ளனா்.
18- 45 வயது வரையுள்ள, 8 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு , பொறியியல் பட்டதாரிகள், வேளாண் பொறியியல், தொழிற் பயிற்சி, தொழில் பட்டயப் படிப்பு, செவிலியா், உணவக மேலாண்மை படித்த வேலைநாடுநா்கள் பங்கேற்றுப் பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 94990-55914 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.
Advertisement
Advertisement