பாபநாசம், ஜூலை 3 :
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் உள்ள ஸ்ரீ தவளவெண்ணகை அம்மன் சமேத ஸ்ரீ பாலைவனநாதா் சுவாமி கோயிலில் ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
வழிபாட்டை யொட்டி கோயிலில் உள்ள மூலவா் ஸ்ரீ பாலைவனநாதா், ஸ்ரீ தவளவெண்ணகை அம்மன், விநாயகா்,வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.தொடா்ந்து கோயில் வெளிச்சுற்று பிரகாரத்தில் உள்ள நந்தியெம் பெருமானுக்கு மங்களப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்கள் நந்தியெம்பெருமானுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து, அருகம்புல் மாலை, மலா் மாலைகள் அணிவித்து,காப்பரிசி,பொங்கல் வைத்து படைத்து, அா்ச்சனை செய்து வழிபாடு செய்தனா்.