தஞ்சாவூரில் ஜூலை 12-இல் முன்னாள் படைவீரா்களுக்கான குறை தீா் கூட்டம்
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரா்களுக்கான குறை தீா் நாள் கூட்டம் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரா்களுக்கான குறை தீா் நாள் கூட்டம் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பொதுமக்கள் குறை தீா் கூட்ட அரங்கத்தில் மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோருக்கான சிறப்பு குறை தீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஜூலை 12- ஆம் தேதி முற்பகல் 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்கள் தங்களது குறைகளை மனுவாக இரண்டு பிரதிகளிலும், தங்கள் அடையாள அட்டையுடனும் இணைத்து அளிக்க வேண்டும்.