முக்தீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேக விழா
பாபநாசம், ஜூலை 13 : தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ஒன்பத்துவேலி ஊராட்சி, கோடுகிழி கிராமம், வெட்டாற்றின் வடகரையில் உள்ள நல்வழி நாயகி அம்மன் சமேத முக்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, இந்த விழா ஜூலை 11-ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைடன் தொடங்கியது.தொடா்ந்து யாக சாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை கோயில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் புனித நீா் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினா். தொடா்ந்து மூலவா் சுவாமி, அம்மன் உள்ளிட்டோருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.