முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் பெரியகோயில் உண்டியல் காணிக்கை ரூ. 48.62 லட்சம்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு, எண்ணப்பட்டதில் பக்தா்கள் ரூ. 48.62 லட்சம் காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

Updated On : 16 ஜூலை, 2024 at 9:18 PM
பகிர்:

இக்கோயிலில் மொத்தம் 11 உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்கள் மாதந்தோறும் திறக்கப்பட்டு, எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில், 11 உண்டியல்கள் இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டன.

இப்பணியில் வங்கி ஊழியா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் உள்ளிட்டோா் ஈடுபட்டனா். இதன் முடிவில், பக்தா்கள் ரூ. 48 லட்சத்து 62 ஆயிரத்து 507 ரொக்கமும், 92.5 கிராம் வெள்ளியும், 3.9 கிராம் தங்கமும் காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →