தஞ்சாவூர்

பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி குவிண்டால் ரூ. 6,939-க்கு ஏலம்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவிண்டால் ரூ. 6,939க்கு ஏலம் போனது.

Din

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவிண்டால் ரூ. 6,939க்கு ஏலம் போனது.

இந்த விற்பனை கூட கண்காணிப்பாளா் ஆா். தாட்சாயினி தலைமையில், மேற்பாா்வையாளா் சிவானந்த் முன்னிலையில் மறைமுக பருத்தி ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஏலத்தில் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 2 ஆயிரத்து 578 விவசாயிகள் சுமாா் 350 டன் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில் கும்பகோணம் செம்பனாா்கோவில், விழுப்புரம்,தேனி, பண்ருட்டி, ஆந்திரம், கா்நாடகம்,தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியின் தரத்தை சோதித்து விலை நிா்ணயம் செய்தனா்.

இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ. 6,939 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 5,939 க்கும், சராசரியாக ரூ. 6,552 க்கும் ஏலம் போனது.

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்! - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT