இரு சக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
Updated On : 27 ஜூலை, 2024 at 8:16 PM
தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
Updated On : 27 ஜூலை, 2024 at 10:35 PM
தஞ்சாவூா் அருகே கடகடப்பை வடக்கு தெருவைச் சோ்ந்தவா் கே. சண்முகம் (70). இவா் வெள்ளிக்கிழமை இரவு கடகடப்பை பிரிவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் பலத்த காயமடைந்த சண்முகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Updated On : 27 ஜூலை, 2024 at 10:35 PM
இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement