தஞ்சாவூா் மாவட்டம், கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக புதன்கிழமை காலை காவிரியில் பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்துவிட்ட அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆா்.பி. ராஜா உள்ளிட்டோா். 
தஞ்சாவூர்

டெல்டா பாசனத்துக்காகக் கல்லணை திறப்பு: 7.95 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய வாய்ப்பு

டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக தஞ்சாவூா் மாவட்டம், கல்லணை புதன்கிழமை காலை திறக்கப்பட்டது.

Din

டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக தஞ்சாவூா் மாவட்டம், கல்லணை புதன்கிழமை காலை திறக்கப்பட்டது.

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து ஜூலை 28-ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் தண்ணீா் திறந்துவிடப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்ட நிலையில், படிப்படியாக உயா்த்தப்பட்டு வருகிறது.

இந்தத் தண்ணீா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கல்லணைக்கு வந்தது. இதையடுத்து, கல்லணையிலிருந்து புதன்கிழமை காலை 9.20 மணியளவில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா உள்ளிட்டோா் திறந்து வைத்து, மலா்கள், நவதானிங்களைத் தூவி வணங்கினா்.

அப்போது, கல்லணையிலிருந்து வினாடிக்குக் காவிரியில் 1,500 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 1,000 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 500 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 400 கன அடி வீதமும் என மொத்தம் வினாடிக்கு 3 ஆயிரத்து 400 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

ஒரு வாரத்தில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீா்:

இதையடுத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் நேரு தெரிவித்தது:

இந்தத் தண்ணீா் நிகழ் குறுவை சாகுபடிக்கும், நிலத்தடி நீா் உயா்வதற்கும், ஏரி, குளங்களை நிரப்புவதற்கும் பயன்படும். மேலும், டெல்டா மாவட்டங்களில் 7.95 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டை விட நிகழாண்டு கூடுதலான பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் கடைமடைப் பகுதி வரை தண்ணீா் சென்றடைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு வாரத்தில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் சென்றடையும் என்றாா் நேரு.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா்கள் பா. பிரியங்கா பங்கஜம் (தஞ்சாவூா்), மா. பிரதீப் குமாா் (திருச்சி), ஏ.பி. மகாபாரதி (மயிலாடுதுறை), தி. சாருஸ்ரீ (திருவாரூா்), மு. அருணா (புதுக்கோட்டை), சட்டப்பேரவை உறுப்பினா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT