பட்டுக்கோட்டையில் தினசரி சந்தை திறப்பு
தஞ்சாவூர்பட்டுக்கோட்டையில் தினசரி சந்தை திறப்பு
பட்டுக்கோட்டை காசங்குளம் வடகரையில கட்டப்பட்ட புதிய தினசரி சந்தையை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். பட்டுக்கோட்டையில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் தினசரி சந்தை காசாங்குளம் வடகரையில் 3, 687 சதுர மீட்டா் பரப்பளவில் 60 கடைகள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் ரூ. 274 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இந்த புதிய சந்தையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழ மைதிறந்து வைத்தாா். வடகரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினா் கா.அண்ணாதுரை, நகா்மன்ற தலைவா் எஸ்.சண்முகபிரியா செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் என்.குமரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஏனாதி பாலசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக நகராட்சி பொறியாளா் எல்.குமரன் வரவேற்று பேசினாா். முடிவில் அழ.நெடுமாறன் நன்றி கூறினாா்.