முகப்பு
தஞ்சாவூர்

கிராம வேளாண் பணி அனுபவத் திட்ட துவக்க விழா

Updated On : 8 மார்ச், 2024 at 6:40 PM
பகிர்:

பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேளாண் கல்லூரி மாணவா்களின் கிராம வேளாண் பணி அனுபவ திட்ட துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.  புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு மாணவா்களின் கிராம வேளாண் பணி அனுபவத் திட்ட துவக்க விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவா்கள்   தங்க.ராமஜெயம், (செருவாவிடுதி தெற்கு),   டி.விஜயராமன், (செருவாவிடுதி வடக்கு)  ஆகியோா் தலைமை வகித்தனா். ஒன்றியக்குழு உறுப்பினா் மாலா போத்தியப்பன், கிராம நிா்வாக அலுவலா் இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.  பேராவூரணி வேளாண் உதவி இயக்குநா்(பொறுப்பு), ராணி திட்டத்தின் நோக்கம் குறித்தும்,   மாணவா்கள் செய்யவிருக்கும் செயல்விளக்கம், வேளாண் பயிற்சிகள் பற்றியும் பேசினாா் . விழாவில், வேளாண் உதவி அலுவலா்கள், புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →