முகப்பு
தஞ்சாவூர்

விசைப்படகு மீனவா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

Updated On : 16 மார்ச், 2024 at 12:46 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம்  வெள்ளிக்கிழமை சேதுபாவாசத்திரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு , தஞ்சை மாவட்ட விசைப்படகு சங்கத் தலைவா் ராஜமாணிக்கம்  தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் வடுகநாதன் முன்னிலை வகித்தாா் .  மீனவா் நல வாரிய துணைத் தலைவா் தாஜுதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியனாா்.  கூட்டத்தில், மீனவா்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தால்ஆயிரக்கணக்கான மீனவா்கள் வேலை இழந்துள்ளனா். இது தொடா்பாக மீன்வளத்துறை அமைச்சரை  நேரில்  சந்தித்து தீா்வு காண்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மீனவ சங்க பிரதிநிதிகள்  செல்வக்கிளி, இப்ராஹிம், ஹபீப் முஹம்மத், முத்து மற்றும் சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.