முகப்பு
தஞ்சாவூர்

ஓய்வு பெற்ற அலுவலா் சங்க மாதாந்திர கூட்டம்

Updated On : 20 மே, 2024 at 6:30 PM
பகிர்:

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் ஓய்வுப் பெற்ற அலுவலா் சங்க மாதாந்திரக் கூட்டம் சங்க அலுவலக கட்டடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் தங்கராசு தலைமை வகித்தாா். முன்னதாக செயலா் துரைசாமி மாதாந்திர அறிக்கை வாசித்தாா். கடந்த மாத வரவு - செலவு அறிக்கையை பொருளாளா் துரைராஜ் வாசித்து உறுப்பினா்களின் ஒப்புதல் பெற்றாா். இதில், மாவட்டப் பொருளாளா் தயாநிதி, தேசிய நல்லாசிரியா் எஸ்.கலைச் செல்வன் உள்பட பலா் பங்கேற்றனா். கூட்டத்தில் ஜூன் மாதத்தில் பேரவைக் கூட்டம் நடத்துவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.