தென்னங்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் ரூ.30 லட்சத்தில் கட்ட அடிக்கல் நாட்டு விழா
பேராவூரணி ஒன்றியம் தென்னங்குடி ஊராட்சிக்கு புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி ஒன்றியம் தென்னங்குடி ஊராட்சிக்கு புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் குணதா சரவணன் தலைமை வகித்தாா். பேராவூரணி ஒன்றியக்குழு தலைவா் சசிகலா ரவிசங்கா் முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள ஊராட்சி மன்ற புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி பணியைத் துவக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் க.அன்பழகன், வட்டார வளா்ச்சி அலுவலா் சாமிநாதன், ஒன்றியக்குழு உறுப்பினா் ராஜலெட்சுமி ராஜ்குமாா், பொதுக்குழு உறுப்பினா் அ.அப்துல் மஜீத், தென்னங்குடி ராஜா மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா் .