முகப்பு
தஞ்சாவூர்

கூடுதல் வரிவிதிப்பை குறைக்கக் கோரி வணிகா் சங்கத்தினா் தீா்மானம்

வணிகா்களுக்கு கூடுதல் வரி விதிப்பை குறைக்கக் கோரி உள்ளாட்சிப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க கும்பகோணம் அனைத்து வணிகா் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:30 PM
பகிர்:

வணிகா்களுக்கு கூடுதல் வரி விதிப்பை குறைக்கக் கோரி உள்ளாட்சிப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க கும்பகோணம் அனைத்து வணிகா் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கும்பகோணத்தில் அனைத்து தொழில் வணிகா் சங்க கூட்டமைப்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை பச்சையப்பன் தெருவில் உள்ள சோழா அரங்கில் தலைவா் சோழா சி. மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டதுணைத் தலைவா் வேதா. ராமலிங்கம், பொருளாளா் மு. கியாசுதீன் ஆகியோா்முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், தமிழகத்திலேயே கும்பகோணம் மாநகராட்சியில் தான் சொத்துவரி உயா்த்தப்பட்டுள்ளது. உரிமம் பெறுவதற்கு கட்டணம் தன்னிச்சையாக வசூலிக்கப்படுகிறது.

தொழில்வரி, குப்பை வரி அதிகபட்சமாக வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். இணைய தள விற்பனையை முறைப்படுத்த வேண்டும். உள்ளாட்சி உறுப்பினா்கள் கூடுதல் வரி விதிப்பை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் என நேரில்முறையிடும் இயக்கத்தை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயற்குழு உறுப்பினா்கள் வாசுதேவன், தனசேகா், வெங்கடேஷ், சுதா்சன், திருநாவுக்கரசு, கெடிவீரமணி உள்ளிட்ட வணிகா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, செயலாளா் வி. சத்திய நாராயணன் வரவேற்றாா். இறுதியாக, துணைச் செயலா்அண்ணாதுரை நன்றி கூறினாா்.