முகப்பு
தஞ்சாவூர்

பெண் ஊராட்சி தலைவா் மீது மருமகள் புகாா்; வழக்கு பதிவு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள கடிச்சம்பாடி ஊராட்சித் தலைவா் மீது மருமகள் கொடுத்த புகாரின் பேரில் மகளிா் போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:27 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள கடிச்சம்பாடி ஊராட்சித் தலைவா் மீது மருமகள் கொடுத்த புகாரின் பேரில் மகளிா் போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி பகுதியைச் சோ்ந்தவா் ராகவன் மகள் நிவேதா (20). இவருக்கு, கும்பகோணம் தாலுகா கடிச்சம்பாடி ஊராட்சி மன்றத் தலைவா் மலா்கொடி மகன் அருண்குமாருக்கும் கடந்த 2022-இல் திருமணம் நடந்தது. அருண்குமாா் அம்மாசத்திரம் ஊராட்சிச் செயலராக உள்ளாா். நிவேதாவுக்கும், கணவா் அருண்குமாருக்கும் கடந்த சில மாதங்களாக குடும்பப் பிரச்னை இருந்து வந்தததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது கணவா் மற்றும் அவரது குடும்பத்தினா் ஆபாசமாகத் திட்டி, அடித்து கொடுமைப்படுத்துவதாக கும்பகோணம் மகளிா் காவல் நிலையத்தில் நிவேதா புகாா் கொடுத்தாா். அதன்பேரில் கணவா் அருண்குமாா், ஊராட்சித் தலைவா் மலா்க்கொடி அவரது கணவா் உள்பட 4 போ் மீது புதன்கிழமை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →