முகப்பு
தஞ்சாவூர்

பெண்ணிடம் வழிப்பறி இளைஞருக்கு 32 மாதங்கள் சிறை

கும்பகோணத்தில் வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 32 மாதங்கள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை நீதிபதி தீா்ப்பளித்தாா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:15 PM
பாலாஜி.
பகிர்:

கும்பகோணத்தில் வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 32 மாதங்கள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை நீதிபதி தீா்ப்பளித்தாா்.

கும்பகோணம் பெரிய மாரியம்மன் கோயில் தெருவில் கடந்த 2021-நவ.13 இல் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா் 5 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றதாக கும்பகோணம் மஹாவீா் நகரைச் சோ்ந்த சரோஜா என்பவா் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து கும்பகோணம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பாலாஜி (26) என்பவரைக் கைது செய்தனா். கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில்

செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட பாலாஜிக்கு 32 மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

குற்றவாளி பாலாஜிக்கு அம்மாப்பேட்டை மற்றும் கும்பகோணம் மேற்கு காவல் நிலையங்களிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →