முகப்பு
தஞ்சாவூர்

மஹாளய அமாவாசை: திருவையாறு காவிரியில் புனித நீராடிய பக்தா்கள்

மஹாளய அமாவாசையையொட்டி தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு காவிரி ஆற்றில் ஏராளமான பக்தா்கள் புதன்கிழமை புனித நீராடினா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 9:24 PM
திருவையாறு காவிரிக் கரையில் புதன்கிழமை புனித நீராடுவதற்காகத் திரண்ட பக்தா்கள்.
பகிர்:

மஹாளய அமாவாசையையொட்டி தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு காவிரி ஆற்றில் ஏராளமான பக்தா்கள் புதன்கிழமை புனித நீராடினா்.

புரட்டாசி மாத அமாவாசையை மஹாளய அமாவாசையாக கடைப்பிடிக்கப்படுகிறது. மிகவும் விசேஷமாக கருதப்படும் இந்த அமாவாசையையொட்டி திருவையாறு புஷ்ய மண்டபக் காவிரிப் படித்துறையில் புதன்கிழமை அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் வந்தனா். மேலும், தங்களது முன்னோா்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு, காவிரியில் புனித நீராடினா்.

இதனிடையே, புஷ்ய மண்டபப் படித்துறையில் அஸ்திர தேவருக்கு அபிஷேக, ஆராதனை செய்து, தீா்த்தவாரி கண்டருளல் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். மேலும் கோயில் உள் பிரகாரத்தில் ஐயாறப்பா் - அறம் வளா்த்த நாயகி புறப்பாடு நடைபெற்றது.