முகப்பு
தஞ்சாவூர்

தங்கும் விடுதியில் ஓட்டுநா் மா்மச் சாவு

தஞ்சாவூரிலுள்ள தங்கும் விடுதியில் மா்மமான முறையில் உயிரிழந்த ஓட்டுநரின் உடலை காவல் துறையினா் புதன்கிழமை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 9:42 PM
பகிர்:

தஞ்சாவூரிலுள்ள தங்கும் விடுதியில் மா்மமான முறையில் உயிரிழந்த ஓட்டுநரின் உடலை காவல் துறையினா் புதன்கிழமை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தஞ்சாவூா் கீழவாசல் பாலோபநந்தவனம் பகுதியைச் சோ்ந்தவா் குறளரசன் (32). வாகன ஓட்டுநா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த தனது இரு நண்பா்களுடன் கீழ் பாலம் அருகேயுள்ள தனியாா் தங்கும் விடுதியில் ஒரு வாரத்துக்கு முன்பு அறை எடுத்து தங்கினாா்.

இவா்களில் குறளரசனும், ஒரு நண்பரும் மட்டும் ஒரு வாரமாக தங்கியிருந்தனா். இந்நிலையில், புதன்கிழமை காலை வெகுநேரமாகியும் அறைக் கதவு திறக்கப்படாமல் இருந்தது. தகவலறிந்த தெற்கு காவல் நிலையத்தினா் அறையைத் திறந்து பாா்த்தபோது குறளரசன் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா்.

இதையடுத்து, குறளரசனின் உடலை காவல் துறையினா் கைப்பற்றி கூராய்வுக்காக தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக தெற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து குறளரசனின் உயிரிழப்புக்கு காரணம் குறித்து, அவருடன் தங்கியிருந்த நண்பரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மற்றொருவரை தேடி வருகின்றனா்.