முகப்பு
தஞ்சாவூர்

வீடு புகுந்து நகைகள், பணம் திருட்டு

தஞ்சாவூா், மாவட்டம், கும்பகோணம் அருகே வீடு புகுந்து பீரோவை உடைத்து நகைகள் பணத்தை திருடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 9:47 PM
பகிர்:

தஞ்சாவூா், மாவட்டம், கும்பகோணம் அருகே வீடு புகுந்து பீரோவை உடைத்து நகைகள் பணத்தை திருடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கும்பகோணம், அருகே உள்ள கொரநாட்டுக் கருப்பூா் அம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரகுநாதன் மகன் சரவணன்(24), இவா் தஞ்சாவூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

இவரது தாயாா் செப்.25-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு விவசாய வேலைக்கு சென்றாா். மாலை வீடுதிரும்பியபோது வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பாா்த்த போது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, பிரேஸ்லெட் 1, மோதிரம், தோடு என மொத்தம் 5 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ. 30 ஆயிரம் திருடு போயிருந்தது.

இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் சரவணன் புதன்கிழமை புகாா் செய்தாா். புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் வீரபாண்டியன் வழக்கு பதிவு செய்து, கைரேகை தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறாா்.