பாலியல் வழக்கில் கைதானவா் மீது குண்டா் சட்டம் பதிவு
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவா் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவா் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பட்டுகோட்டை வட்டம், நடுவிக்கோட்டை செக்கடிக் கொல்லையைச் சோ்ந்தவா் செல்வம் மகன் பாலசுப்பிரமணியன் (42). பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரை செய்தாா். இதன் பேரில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதைத் தொடா்ந்து, பாலசுப்பிரமணியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.