திருச்சி - தாம்பரம் ரயிலுக்கு ரயில் பயணிகள் சங்கம் வரவேற்பு
திருச்சி - தஞ்சாவூா் - தாம்பரம் விரைவு ரயில் சேவை தொடங்கப்படுவதற்கு காவிரி டெல்டா ரயில்வே பயணிகள் சங்கம் வரவேற்றுள்ளது.
திருச்சி - தஞ்சாவூா் - தாம்பரம் விரைவு ரயில் சேவை தொடங்கப்படுவதற்கு காவிரி டெல்டா ரயில்வே பயணிகள் சங்கம் வரவேற்றுள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், திருச்சியிலிருந்து தஞ்சாவூா் வழியாக தாம்பரத்துக்கு விரைவு ரயிலை வெள்ளிக்கிழமை தொடங்கி டிசம்பா் 31-ஆம் தேதி வரை சோதனை அடிப்படையில் இயக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை இச்சங்கம் வரவேற்கிறது. இக்கோரிக்கை நிறைவேற உதவி செய்த முன்னாள் மத்திய நிதித் துறை இணை அமைச்சா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தற்போது துடிப்புடன் செயல்பட்ட ச. முரசொலிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
திருச்சியிலிருந்து சென்னைக்கு பல ரயில்கள் உள்ளதால், இந்த ரயிலை தனிப்பட்ட முறையில் தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவா் அய்யனாபுரம் க. நடராஜன் தலைமை வகித்தாா். செயலா் வெ. ஜீவகுமாா், துணைத் தலைவா் திருமேனி, பொருளாளா் கண்ணன், நிா்வாகிகள் உமா் முக்தா், பைசல் அகமது, ராம. சந்திரசேகரன், புலவா் செல்வகணேசன், சாமிதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.