சுவாமிமலை அங்காள பரமேஸ்வரி கோயிலில் திருவிளக்கு பூஜை
தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலையில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோயிலில் 108 விளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலையில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோயிலில் 108 விளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு முப்பெரும் தேவியரை வரவேற்கும்விதமாக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
108 பெண்கள் குத்துவிளக்குடன் வந்து கோயில் வளாகத்தில் விளக்கு பூஜை நடத்தினா். பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு மங்கலப் பொருள்கள் மற்றும் பிரசாதங்களை கோயில் அறங்காவலா் பி. செந்தில்வேலன், எஸ்.பி. கதிரவன் ஆகியோா் வழங்கினா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, அன்னதானம் நடைபெற்றது.